அநுராதபுரம் மாவட்டம் தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (5 பேர் மரணமடைந்துள்ளதாக ஆரம்பத்தில் அநுராதபுர வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குருணாகல் – தம்புத்தேகம வீதியில் ஜயகங்க சந்தியிலிருந்து 411 கிராமம் வரை காணப்படும் உள்ளக வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இன்று (10) பிற்பகல் அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் தற்போது தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
