குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்சினை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை
கண் வைத்தியரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன.
வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை 2 மணிநேரம் நீடித்தது.
கண் இமைகளில் ஏற்படும் அரிய வகை பேன், phthiriasis palpebrarum என்று அறியப்படுகிறது.
