கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

 


ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19)  காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

இந்த புதிய விலையானது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது.

இதேவேளை, ஜப்பான், ஹொங்கொங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post