வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (18) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்த 71 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கேல்ல, கொலன்னா பகுதியை சேர்ந்தவர்.
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
உள்ளூர் செய்தி