மதுபான விற்பனை நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

 


யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நேற்று (22) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், ஊர்வலமாக சென்று நெடுந்தீவு பிரதேச செயலரிடம் மகஜரொன்றை கையளித்த பின்னர் அரசாங்க அதிபருடன் பேசி குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக பிரதேச செயலர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-


Post a Comment

Previous Post Next Post