மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Tags
உள்ளூர் செய்தி