மகிமை நிறைந்த மஹா சிவராத்திரி இன்று...

 

சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான  ஒரு நாளாக இது, கருதப்படுகிறது. சிவ பக்தர்களுக்கு மஹா சிவராத்திரி மிகவும் விஷேசமானது. 

300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வரப்போகும் மஹா சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பானதென கூறப்படுகிறது.

இலங்கையில் முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று சிவராத்திரி பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான்கு ஜாமப் பூஜைகளுடன் லிங்கோற்பவருக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

Post a Comment

Previous Post Next Post