போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது...

 


கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 53 கிராம் 240 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 24 கிராம் 30 மில்லிகிராம் கேரள கஞ்சா, 2,950 போதை மாத்திரைகள் மற்றும் 86,000 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், குறித்த சந்தேக நபரான பெண்ணும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post