கட்டுநாயக்கவில் வர்த்தகர் ஒருவர் கைது...



வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வர்த்தகர் போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வசிக்கும் 64 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. - 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குறித்த வர்த்தகர் குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணங்களை தயாரித்து நபர் ஒருவரை இத்தாலிக்கு அனுப்ப முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த வர்த்தகருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post