நடிகர் கவின்
சின்னத்திரையின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கவின். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோவாக மாறியுள்ளார்.
லிப்ட், டாடா ஆகிய படங்கள் மூலம் மக்கள் மனதை நம்பிக்கை நாயகன் என இடம்பிடித்துள்ளார். அடுத்ததாக கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஸ்டார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் கவின் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைபெறவுள்ளது என அவரே கூறியுள்ளார்.
போலீசிடம் அடி வாங்கிய கவின்
இந்த நிலையில், கவின் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டார்.
இதில் "அஜித் ரசிகன் என்று சொல்லவதை விட, அஜித் வெறியன் என்று சொல்லலாம். ஒரு முறை எங்கள் ஊரில் விஜய் மற்றும் அஜித் இருவருடைய படமும் ஒரே நாளில் வெளியானது. அந்த சமயத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீஸுக்கும் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால், அந்த கூட்டத்தில் எனக்கும் அடி விழுந்தது" என கூறினார்.