மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு...



ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் நேற்று (26) பிற்பகல் களு கங்கையில் மாணிக்கக்கல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post