மன்னாரில் தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்...

 


நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி (வர்த்தக பழம்) மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

அதே நேரம் நுங்கு சர்பத் போன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் தர்பூசணி விற்பனை இடம் பெற்று வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post