எக்ஸ்பிரஸ் பேர்ல் தொடர்பான வழக்கு!



எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக குறித்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் கப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அந்த நிலையில் மேலதிக விசாரணை தேவையா என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post