தியத்தலாவை விபத்து - இருவர் கைது...

 


தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post