ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் ஹிட் படம் கில்லி- 3 நாளில் இத்தனை கோடி வசூலா?


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது. அப்படி அவர் நடித்த படங்களில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. 

தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க வெளியான இப்படத்திற்கு வித்யாசாகர் தான் இசை.

படத்தில் இடம்பெற்ற வில்லனின் செல்லமே வசனம் இப்போது கேட்டாலும் அப்படியே சிலிர்க்கும், அதிலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு சொல்லமே வேண்டாம். 

இப்படம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது.


பட வசூல்

தமிழகத்தில் 600 திரைகளில் வெளியாகியுள்ளது விஜய்யின் கில்லி படம். படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே பெரிய எமோஷனில் பேட்டி கொடுக்கிறார்கள். மீண்டும் தளபதியை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது என்கிறார்கள். 

படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது 3 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 14 கோடி மேல் வசூலித்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post