கற்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அப்படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த படகில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்கள் பயணித்துள்ளனர்.
இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tags
உள்ளூர் செய்தி