ரம்பேவ பகுதியில் பயங்கர விபத்து...



ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 2 சிறுமிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று வீதியில் பயணித்த இந்த 5 பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த குழுவினர் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்திற்கு காரணமான கேப் அங்கிருந்து சென்றுள்ளது.

கேப் வண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post