மேலும் ஒரு பெண் சடலமாக மீட்பு...



களுத்துறை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (09) இரவு களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுகங்கை முகத்துவாரத்தை அண்மித்த கடற்கரையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களாக நீரில் கிடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post